
கோலாலம்பூர், பிப்ரவரி 27 – முன்னாள் நிதி அமைச்சர் அல்லாஹ்யர்ஹம் துன் டாக்டர் டைம் சைனுத்தீனின் (Allahyarham Tun Dr Daim Zainuddin) நான்கு குழந்தைகளை, நடைபெற்று வரும் விசாரணைக்கு உதவுவதற்காக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தீவிரமாக தேடி வருகிறது.
தேடப்பட்டுவரும் அஸ்னிதா கடைசியாக காஜாங், கன்ட்ரி ஹைட்ஸ் (Country Heights) பகுதியில் வசித்தவர். அவரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரியை உடனடியாக தொடர்புகொள்ள வேண்டுமென போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் எம்.டி. வீரா டானி (Md Wira Dani) மற்றும் முகமட் அமீர் (Ahmad Aiman), முகமட் அமீன் (Muhammed Amin) ஆகியோர் கோலாலம்பூரில் வசித்தவர்கள். அவர்களை கண்டறிவதற்கும் ஊழல் தடுப்பு ஆணையம் பொதுமக்களின் ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளது.
இந்த நபர்கள் குறித்து தகவல் அறிந்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்புகொள்ளவோ அல்லது ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவோ பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



