அமெரிக்கா, ஜூலை-8, சாக்லேட் பிரியர்களால் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 7-ம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக சாக்லேட் தினம், இவ்வாண்டு விண்வெளியிலும் களைக்கட்டியது.
அனைத்துலக விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள விண்வெளி வீரர்களும், இந்த சாக்லேட் தினத்தைத் தவற விட விரும்பவில்லை.
அவர்கள் மிதந்துக் கொண்டே சாக்லேட்டை ருசிக்கும் வீடியோக்களை, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) தனது Instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
ஒரு வீடியோவில், ஸ்ட்ராபெரி பழங்களுடன் சாக்லேட் கலக்கப்பட்ட சப்பாத்தி (strawberry+chocolate creep) மிதக்கிறது; அடுத்த படத்தில் ஒரு விண்வெளி வீரர் chocolate mousse-சை ருசிக்கிறார்.
இன்னொரு வீடியோவில், விண்வெளி வீரர்கள் ‘கட்டிய’ சாக்லேட் முலாம் பூசிய
பிஸ்கட் வீடு தெரிகிறது.
சொந்தை வீட்டை விட்டு தொலை தூரத்தில் இருப்பவர்கள், அந்த ஏக்கத்தை ‘சாக்லேட் பிஸ்கட் வீடு’ மூலம் போக்கிக் கொள்வதாக ESA வருணித்தது.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், விண்வெளியில் மிதந்துக் கொண்டே சாக்லேட் சாப்பிடுவதே அலாதி தான் என கருத்துப் பதிவிட்டு வருகின்றனர்.
உலக சாக்லேட் தினத்தை இவ்வளவு உயரத்தில் கொண்டாடியவர்கள் இவர்களாகத்தான் இருப்பார்கள் என இன்னொருவர் கூறியது சிரிப்பை வரவழைத்தது.