Latestமலேசியா

Sunway Lagoonனில் தென்கிழக்காசியாவின் முதலாவது மினியேச்சர் வாகன உற்பத்தி மையம்

சன்வே, ஆகஸ்ட்.04- Sunway Lagoon, Sunway Tiny Experience Factory எனும் கல்வி மற்றும் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய முழுமையான மினியேச்சர் வாகனத் தயாரிப்பு மையத்தைத் திறந்துள்ளது. அதன் மூலம் படைப்பாற்றல், தொழில்நுட்பம் மற்றும் STEM கற்றலை அது ஊக்குவிக்கிறது. சுமார் 189 சதுர மீட்டர் பரப்பளவில் ஆறு முழுமையான அறைகளைக் கொண்டுள்ள STEF மையம், தென்கிழக்கு ஆசியாவில் முழுமையாகப் பிரிக்கப்பட்ட (CKD) மற்றும் முழுமையாக உருவாக்கப்பட்ட (CBU) உற்பத்திப் பயணங்கள் இரண்டையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான மினியேச்சர் வாகனத்தை உருவாக்கும் அனுபவத்தை வழங்குகிறது. பொதுமக்கள் தானியங்கி செயல்முறையின் மூலம், வாகன உற்பத்தியின் முழுமையான பயணத்தையும் அனுபவிப்பர். நவீன உற்பத்தியில் செயல்திறனையும் புதுமையையும் மேம்படுத்துவதற்காக ரோபோட்டிக்ஸ், தொழில்நுட்பம் மற்றும் துல்லியமான பொறியியல் ஆகியவை எவ்வாறு ஒன்றிணைகின்றன என்பதையும் இந்த அனுபவம் தருகிறது.

உண்மையான கார் தயாரிப்பு தொழிற்சாலையைப் போலவே, STEF மினியேச்சர் வாகன மையம் இருக்கிறது. பொதுமக்கள் மினியேச்சர் வாகனப் பாகங்களை ஒன்றிணைப்பதோடு ரோபோடிக் தொழில்நுட்பத்துடன் தங்களின் சொந்த மினியேச்சர் வாகனத்தையும் உருவாக்கலாம். மினியேச்சர் வாகனத்தைத் தயாரிக்கும் முறை அனைத்தும் விளக்கப்பட்டு அதனை உருவாக்க அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். STEF ஓட்டுநர் உரிமம், சான்றிதழ் மற்றும் முழுமையாக்கப்பட்ட சிறிய வாகனத்தையும் அவர்கள் பெறுவார்கள். அச்சிறிய வாகனத்தை அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.

STEM கல்வியை வலியுறுத்துவதோடு குழந்தைகள், குடும்பங்கள், மாணவர்கள், பொழுதுபோக்கு ஆர்வலர்கள் மற்றும் மினியேச்சர் சேகரிப்பாளர்கள் என அனைவருக்கும் ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை STEF கொடுக்கிறது. அம்மையம் Sunway Lagoon-னில் தினமும் காலை 11:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை திறந்திருக்கும். பள்ளி விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களைத் தவிர, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அது மூடப்பட்டிருக்கும். நுழைவுக் கட்டணங்கள்: RM99 (CBU அனுபவம்) மற்றும் RM69 (CKD அனுபவம்).

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!