செப்பாங், டிசம்பர்-14,போதைப்பொருள் குற்றம் தொடர்பில் சிலாங்கூர், சைபர்ஜெயாவில் கைதான 41 வயது உள்ளூர் கலைத் துறை பிரபலம் ஒருவர், விசாரணைக்காக 5 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
செப்பாங் OCPD நோர்ஹிசா’ம் பஹாமான் (Norhizam Bahaman) அதனை உறுதிப்படுத்தினார்.
அவ்விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடைபெறுமென அவர் சொன்னார்.
நேற்று பிற்பகல் வாக்கில் அந்நபரின் வீட்டில் நடத்திய சோதனையில், 60.3 கிராம் எடையிலான கஞ்சா சிக்கியது.
சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்ததும் உறுதிச் செய்யப்பட்டது.
எனினும் அவருக்கு பழையக் குற்றப்பதிவுகள் எதுவுமில்லை என நோர்ஹிசா’ம் கூறினார்.