Latestமலேசியா

வீட்டை உடைத்து 7 மில்லியன் ரிங்கிட் பொருட்களை திருடியதாக கொலம்பியாவைச் சேர்ந்த இருவர் மீது குற்றச்சாட்டு

 கோலாலம்பூர், ஜூன் 28 – புக்கிட் டமன்சாராவிலுள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டை உடைத்து  7மில்லியன் ரிங்கிட்  மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்டதாக  கொலம்பியாவைச் சேர்ந்த  இருவர் மீது   செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.  39 வயதுடைய யேசோன் அன்ரஸ் ரோஸ்சே கார்சன்  (Yeyson Andres Rocha Garzon) மற்றும்  22 வயதுடைய   ஜூலியன்  டேவிட் செர்னா பெனா ( Julian  David Sarna Pena  ) ஆகியோர்  குற்றச்சாட்டை மறுத்தனர்.   

இன்னும் தலைமறைவாக இருந்துவரும்  ஒருவருடன்   சேர்ந்து  அவ்விருவரும்  மே  31ஆம் தேதி   புக்கிட் டமன்சாரா,  ஜாலான் செத்தியா முர்னியிலுள்ள  ஒரு வீட்டில்  இரவு  10 மணியளவில்  இக்குற்றத்தை புரிந்ததாக  நீதிபதி  அஸ்ரோல்  அப்துல்லா (Azrol Abdullah) முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.  

குற்றவாளி என நிருபிக்கப்பட்டால்   ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும்   அபராதம் விதிக்கப்படும். தண்டனை சட்டத்தின்   34 ஆவது  விதியின் கீழ்  அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.  அவ்விருவரும்    அடையாள ஆவணங்களை கொண்டிருக்கவில்லை என்பதால்  அவர்களுக்கு  ஜாமின்  வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!