
ஷா ஆலாம், ஜூன்-9-நாட்டின் முதல் நிலை மின்னியல் தமிழ் ஊடகமான ‘வணக்கம் மலேசியா’, அதன் CSR சமூகக் கடப்பாட்டின் ஒரு பகுதியாக தனது இரண்டாவது நல்லெண்ண கோல்ஃப் போட்டியை ஷா ஆலாம், புக்கிட் கெமுனிங் கோல்ஃப் ரிசோர்ட்டில் மிக பிரம்மாண்டமாக நடத்திப் பாராட்டைப் பெற்றுள்ளது.
“Swing with Purpose, Play with Passion” என்ற உன்னதக் கருப்பொருளில் நடைபெற்ற இந்த ‘வணக்கம் மலேசியா நல்லெண்ண கோல்ஃப் போட்டி 2026’, இந்நிறுவனத்தின் CSR நடவடிக்கைகளுக்கு நிதித் திரட்டும் நோக்கத்தைக் கொண்டதாகும்.
கடந்தாண்டைப் போலவே இவ்வாண்டும் கோஃல்ப் விளையாட்டாளர்கள், நல்ல்லுள்ளங்கள் ஒன்றுகூடி தங்களின் ஆதரவை வெளிப்படுத்திய இந்நிகழ்ச்சியில், இம்முறை பத்து அம்பாட் தமிழ்ப்பள்ளி, ஷா ஆலாமிலுள்ள ஆதரவற்றோர் இல்லம், SIGA ஜூனியர் கோல்ஃப் விளையாட்டாளர்களின் மேம்பாட்டுத் திட்டம், கிள்ளான் ரோட்டரி கிளப்பின் சுகாதாரப் பராமரிப்புத் திட்டம், மற்றும் விபத்தில் இடுப்பு எலும்பு முறிந்த ஷமேதா கிருஷ்ணன் எனும் பெண்ணுக்கு தலா 1,000 ரிங்கிட் நன்கொடை வழங்கப்பட்டது.
இதில் ஷமேதாவின் இன்னல்களைக் கேட்ட மாத்திரத்தில், நிகழ்ச்சியின் போதே நன்கொடையாளர்கள் 22,500 ரிங்கிட் நிதியைத் திரட்டித் தந்தது, இந்நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது.
இதனிடையே இந்த நல்லெண்ண கோல்ஃப் போட்டியில் நாடளாவிய நிலையில் சுமார் 120 கோல்ஃப் வீரர்கள் உற்சாகத்துடன் களமிறங்கினர்; அதிலும் குறிப்பாக முதன் முறையாக 8 பெண் போட்டியாளர்களும் பங்கெடுத்தது இப்போட்டியின் அடுத்தகட்ட வளர்ச்சியை பறைசாற்றியது.
இப்போட்டியில் PHS Autohaus நிறுவனத்தின் சார்பில் hole in one வெற்றியாளருக்கு RM186,580 மதிப்பிலான Volkswagen Golf R Line கார் ஒன்று பரிசாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இபோட்டியின் பொதுப் பிரிவில் சாம்பியன் பட்டத்தை ஷங்கர் மணியம் (Shanker Maniam) தட்டிச் சென்றார்.
அவருக்கு வெற்றியாளர் கிண்ணத்தோடு, 3,000 ரிங்கிட் மதிப்புள்ள Panasonic 50 அங்குல LED தொலைக்காட்சி, 890 ரிங்கிட் மதிப்பிலான Eagle Cart Bag மற்றும் தேசிய அளவிலான இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
சீனியர் பிரிவில் டத்தோ நரேனசேகரன் தங்கவேலு (Dato Narenasegaran Thangaveloo) வாகை சூடினார்; அவருக்கு Eagle Eye Cart Bag, வணக்கம் மலேசியாவின் பரிசுப் பை மற்றும் வெற்றியாளர் கிண்ணம் வழங்கப்பட்டது.
Magnum Corporation, Magnum Care, PHS Autohaus, Bridgestone Golf & Eagle Eye, Batik Air, Panasonic, Pearl Star Tour & Travels நிறுவனம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் இப்போட்டிக்கு ஆதரவு கரம் நீட்டியிருந்தன.
தொடர்ந்து, இப்போட்டியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், போட்டி ஏற்பாட்டையும், வணக்கம் மலேசியாவின் முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினார்.
(PLACE FOR VIP INTERVIEW – YB PREAKAS SAMBUNATHAN)
போட்டியில் பங்கேற்ற விளையாட்டாளர்கள், இதுபோன்றதொரு சமூக நலன் சார்ந்த விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த வணக்கம் மலேசியாவுக்குத் தங்களின் வாழ்த்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.
(PLACE FOR GOLFERS INTERVIEW)
நிகழ்ச்சியின் இடைடையே, அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் Titoni கடிகாரம், கேராளாவின் கொச்சி மற்றும் தாய்லாந்து பேங்கோக் சென்று வர Batik Air விமான டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விலையுயர்ந்த பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதியாக, தமிழ்ப்பள்ளிகள் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுக்கான தங்களின் கடப்பாட்டை வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குநர் எம். தியாகராஜன், மறுஉறுதிப்படுத்தினார்.
(PLACE FOR BOSS INTERVIEW – MR. M. THIAGARAJAN)
மக்களுக்குச் செய்திகளை உடனுக்குடன் வழங்குவதில் மட்டுமின்றி, சமூகப் பொறுப்பிலும் வணக்கம் மலேசியா எப்போதும் முன்னணியில் திகழ்கிறது என்பதை இந்நிகழ்ச்சி மீண்டும் நிரூபித்துள்ளது.
இந்நிகழ்வில், வணக்கம் மலேசியா செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி வெங்கடேசன், சந்தைப் பிரிவுத் தலைவர் ஜெகநாதன், தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் ரமேஸ் பட்மநாபன், சந்தைப் பிரிவு அதிகாரி கோபாலகிருஸ்ணன் ஆகியோரும் கலந்துக் கொண்டிருந்தனர்.



