Latestமலேசியா

வெளிநாட்டவரை மிரட்டினர் பெண்ணும் வளர்ப்பு தந்தையும் உட்பட நால்வர் கைது

குளுவாங், மார்ச் 9- குளுவாங்கில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டவரை மிரட்டிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நால்வரில் ஒரு பெண்ணும் 12 குற்றப் பதிவுகளைக் கொண்ட அவரது வளர்ப்புத் தந்தையும் அடங்குவர்.

நேற்று அதிகாலை மணி 4.45க்கு கிடைத்த புகாரைத் தொடர்ந்து, 24 முதல் 50 வயதுடைய அந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடமிருந்து ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவவர் துணைக் கமிஷனர் பஹ்ரின் முகமட் நோ ( Bahrin Mohd Noh )தெரிவித்தார்.

இரண்டாவது சந்தேகப் பேர்வழியின் மனைவி என்று கூறிக்கொண்டவர் விசாரணைக்குப் பிறகு சம்பந்தப்பட்ட அந்த ஆடவரின் வளர்ப்பு மகள் என தெரிய வந்தது.

அப்பெண் இதற்கு முன் குற்றச் செயல் பதிவு எதனையும் கொண்டிருக்கவில்லை எனினும் 3ஆவது மற்றும் நான்காவது சந்தேகப் பேர்வழிகள் 10 குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் குற்றச்சாட்டையும் கொண்டிருந்ததாக பஹ்ரின் கூறினார். அவர்கள் அனைவரும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!