Latestமலேசியா

வெளிநாட்டு தொழிலாளர்கள், போதைப் பொருள் உட்பட 3 புதிய சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் ; FOMEMA நிபந்தனை

புத்ராஜெயா, டிசம்பர் 28 – வெளிநாட்டு தொழிலாளர்கள், போதைப் பொருளை கண்டறிவது உட்பட மூன்று புதிய மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனும் நிபந்தனையை, ஃபோமேமா ‘FOMEMA’ – வெளிநாட்டு ஊழியர்களின் மதுத்துவ பரிசோதனை கண்காணிப்பு நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இம்மாதம் 16ஆம் தேதி தொடங்கி அந்த நிபந்தனைகள் அமலுக்கு வந்துள்ளன.

புதிதாக தருவிக்கப்படும் அந்நிய தொழிலாளர்களுடன், நாட்டில் ஏற்கனவே தங்கி இருப்பவர்கள், தங்கள் வேலை அனுமதியை புதுப்பிக்க வேண்டும் என்றால், அந்த புதிய நிபந்தனைகளை பூர்த்திச் செய்திருக்க வேண்டும்.

போதைப் பொருளை அடையாளம் காண்பது, ஹெபடைடிஸ் சி ‘Hepatitis C’ மற்றும் ஃபைலேரியாசிஸ் ‘Filariasis’ ஆகியவையே அம்மூன்று சோதனைகள் என, ஃபோமேமா ‘FOMEMA’ அதன் முகநூலில் பதிவிட்டுள்ளது.

அந்நிய தொழிலாளர்களால் ஏற்படும் சுகாதார பாதிப்புகளை தடுக்க ஏதுவாக, அப்புதிய நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக, ஃபோமேமா கூறியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!