சென்னை, ஆகஸ்ட்-4, நடிகர் விஜய் நடித்து வரும் GOAT படத்தின் மூன்றாவது பாடலான SPARK நேற்று வெளியாகி அவரின் இரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.
மீனாட்சி சௌத்ரி ஜோடியாக இதில் இளமை காலத்து விஜய்யை கிராபிக்ஸ் தொழில்நுட்ப முறையில் மிகவும் இளமையாக மாற்றியிருக்கின்றனர்.
ஆட்டம் போட வைக்கும் அப்பாடலில் ‘தளபதி’யை அத்தனை இளமையாகப் பார்த்து அவரின் தீவிர இரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
எனினும், கிராபிக்ஸ் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாமென்ற ஏமாற்ற குரல்களையும் கேட்கவே முடிகிறது.
யுவன் ஷங்கர் ராஜாவும் – விருஷா பாலுவும் பாடியுள்ள அப்பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார்.
யுவன் இசையில் ஏற்கனவே ‘விசில் போடு’ மற்றும் ‘சின்ன சின்ன’ என்ற இரு பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடைசிக் கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு வெளிநாடு செல்லவிருப்பது கூடுதல் தகவலாகும்.
அநேகமாக ரஷ்யாவில் படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்படுமென தெரிகிறது.
விஜயின் 68-வது படமான GOAT செப்டம்பர் 5-ம் தேதி உலகெங்கும் திரையீடு காணவுள்ளது.