Latestஉலகம்

வெவ்வேறு வருடங்களில் பிறந்த இரட்டையர்கள்

அமெரிக்கா, ஜன 5 – இரட்டை குழந்தைகள் என்றாலே தனிச்சிறப்பு. அதிலும் ஒரு குழந்தை ஒரு வருடத்திலும் மற்றொரு குழந்தை அடுத்த வருடத்திலும் பிறந்துள்ளது கூடுதல் வியப்பாக அமைந்துள்ளது. 

அமெரிக்காவில் பில்லி ஹம்ப்ரி மற்றும் ஈவ் என்ற தம்பதியருக்கு டிசம்பர் 31, 2023 இரவு 11:48ற்கு எஸ்ரா என்ற குழந்தையும், ஜனவரி 1, 2024ல் 12:28ற்கு எசேக்கியேல் என்ற குழந்தையும் பிறந்துள்ளனர்.

இருவருக்குமிடையே 40 நிமிடம்தான் வித்தியாசம் என்றாலும், வெவ்வேறு வருடங்களில் பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதில் தந்தை பில்லி ஹம்ப்ரி பிறந்த தினமான டிசம்பர் 31 அன்றே அவரது முதல் குழந்தை எஸ்ரா பிறந்தது கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!