தம்பின், ஜூன்-21, நெகிரி செம்பிலான், ஜாலான் தம்பின்-கெமாசில் வேலைக்குச் சென்றுக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டி, சாலையில் விழுந்துக் கிடந்த மரத்தில் மோதி படுகாயமடைந்தார்.
தாமான் ஸ்ரீ நோவா ( Taman Sri Nova ) அருகே இன்று காலை 7 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது பெய்த கனமழை மற்றும் புயல் காற்றில் அம்மரம் சாய்ந்ததாகத் தெரிகிறது.
ஆனால், மழையில் மோட்டார் சைக்கிளோட்டி அதனைக் கவனிக்காமல் மோதியிருக்கிறார்.
அதில் 20 வயது அவ்விளைஞர் வயிற்றிலும் தொடையிலும் படுகாயம் அடைந்தார்.
தற்போது குவாலா பிலா, துவாங்கு அம்புவான் நஜிஹா மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதை, தம்பின் போலீஸ் உறுதிபடுத்தியது.