Latestமலேசியா

வேலை வாய்ப்பு இன்றி வெளிநாட்டு தொழிலாளர்களை தருவிக்கும் முதலாளிகள் ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை – சிவகுமார்

ஷா ஆலம், நவ 23- வேலை வாய்ப்பு இல்லாமல் வெளிநாட்டு ஊழியர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வரும் முதலாளிகள் அல்லது முகவர்களால் ஏற்படும் ஏதேனும் தவறுகளை கண்டறிந்தால், உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர் துறைக்கு வலியுறுத்தியிருப்பதாக மனித வள அமைச்சர் வ. சிவக்குமார் கூறினார். வெளிநாட்டு தொழிலாளர்களின் நிர்வாக முறையில் இதற்கு முன் சில பிரச்சினைகளும் பலவீனங்களும் இருந்தாலும் அது தொடர்ந்து விவேகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருப்பதை மனிதவள அமைச்சு (KSM) உறுதி செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதனிடையே வேலையின்போது சிலுவை சின்னத்தை அணிந்ததற்காக அதன் ஊழியர் ஒருவரை பணிநீக்கம் செய்த தலைநகரில் உள்ள ஒரு முஸ்லீம் சீன உணவகத்தின் செயல்கள் குறித்து தொழிலாளர் துறை இதுவரை எந்த புகாரும் அல்லது அறிக்கையும் பெறவில்லை. இது தொடர்பான புகாரை தொழிலாளர்துறை பெற்றால் அந்த விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் தங்க கை விருது விழாவில் (Majlis Anugerah Tangan Emas Perdana Menteri ) கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது சிவக்குமார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!