Latestமலேசியா

வைரல் வீடியோவில் சிக்கிய நபர் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி; போலீஸ் தகவல்

கூலிம், ஏப்ரல்-21-கெடா, கூலிமில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை போலீஸார் வலுக்கட்டாயமாக கீழே இழுத்து பிடிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து தற்போது மாநிலப் போலீஸ் விளக்கமளித்துள்ளது.

நேற்று காலை 11 மணியளவில் ஜாலான் சுங்கை ஊலாரில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, 32 வயது அந்நபர் நிறுத்தாமல் தப்பிச் சென்றதாக, கூலிம் போலீஸ் துணைத் தலைவர் சூப்பரிடெண்டன்ட் Tengku Faisal Yeng கூறினார்.

சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் போக்குவரத்து விதிகளை மீறி, மற்ற வாகனமோட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அவர் அதிவேகமாகச் சென்றார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்ட அந்நபரிடம் நடத்திய சோதனையில், அவரிடம் ‘கெத்தும்’ (Ketum) போதை நீர் அடங்கிய இரண்டு பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

மேலும், சிறுநீர் பரிசோதனையில் அவர் ‘மெத்தாம்பேட்டமைன்’ (Methamphetamine) வகை போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்ததும் உறுதியானதாக Tengku Faisal சொன்னார்.

சந்தேக நபருக்கு ஏற்கனவே குற்றப்பின்னணி இருப்பதும் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் சட்டம் மற்றும் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க ஏதுவாக, இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படவுள்ளது.

எனவே, இந்தச் சம்பவம் குறித்து பொது மக்கள் வதந்திகளையும் யூகங்களையும் பரப்ப வேண்டாம் என போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!