Latestமலேசியா

ஹாஜி பெருநாள்: சாலைத் தடுப்புகள் இல்லை; கண்காணிப்பிலிருக்கும் 2,000 JPJ அதிகாரிகள்

காஜாங், மே 26 – ஹாஜி பண்டிகையை முன்னிட்டு சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ சாலைத் தடுப்புகளை (SJR) அமைக்காது.

அதற்கு பதிலாக, நாடு முழுவதும் விபத்து அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில் 2,000 அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் அமலாக்கப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் (Anthony Loke), பண்டிகைக் காலங்களில் சாலைத் தடுப்புகள் போக்குவரத்து நெரிசலை அதிகரிப்பதால் அவை தவிர்க்கப்படுவதாக தெரிவித்தார்.

அமலாக்க நடவடிக்கைகளின் போது ஓட்டுநர் உரிமம், சாலைவரி, காப்புறுதி மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், விரைவுப் பேருந்துகள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன் ஓட்டுநர்கள், வாகனங்களின் பாதுகாப்பு நிலை மற்றும் போதைப்பொருள் பரிசோதனைகளும் நடத்தப்படும்.

பாதுகாப்பு விதிகளை பின்பற்றத் தவறும் பேருந்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களின் செயல்பாட்டு உரிமம் இடைநிறுத்தப்படலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!