Latestமலேசியா

ஹீலியம் எரிவாயு தோம்பில் போதைப் பொருள் 3 வெளிநாட்டினர் உட்பட நால்வர் கைது

ஹீலியம் எரிவாயு தோம்பில் போதைப் பொருள் 3 வெளிநாட்டினர் உட்பட நால்வர் கைது

கோலாலம்பூர், பிப்ரவரி 9

ஜாலான் துன் ரசாக்கில் மேற்கொள்ளப்பட்ட இரண்டு சோதனை நடவடிக்கைகளுக்குப் பின் , மூன்று வெளிநாட்டினர் உட்பட நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டதோடு ஹீலியம் எரிவாயு தோம்புகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல்வேறு போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். ஜாலான் துன் ரசாக்கில் உள்ள ஒரு வீட்டில் மாலை மணி சுமார் 5.30 அளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் ( Fadil Marsus ) தெரிவித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் தலைநகரைச் சுற்றி போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் சீனா மற்றும் ஹங்காங்கைச் சேர்ந்த இரு ஆடவர்களும் , 26 முதல் 36 வயதுக்குட்பட்ட ஒரு சீனப் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனையில் ஹீலியம்’ என்று குறிக்கப்பட்ட ஐந்து எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டதில் அதில் Methylenediozy methamphetamine
போதைப் பொருள் வைக்கப்பட்டிருந்தது.

மேலும் அதன் உள்ளே இருந்த மூன்று பிளாஸ்டிக் கைகளில் தூள் வடிவிலான போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகப் பேர்வழிகளும் போதைப் பொருளை பயப்டுத்தியிருப்பதும் அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக கோலாலம்பூரைச் சுற்றியுள்ள இரவு விடுதிகளில் வாடிக்கையாளர்கள் MDMA போதைப் பொருளை புகைப்பதற்காக பலூன்களில் இணைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வடிவில் போதைப்பொருட்களை தீவிரமாக விநியோகித்து வருவதாக விசாரணையில் கண்டறியப்பட்டதாக பாடில் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உள்நாட்டைச் சேர்ந்த 39 வயதுடைய ஆடவரும் கைது செய்யப்பட்டுள்ளார். போதைப் பொருட்களுடன் , ஏழு பொட்டலங்களைக் கொண்ட பலுன்கள், ஒரு பெரோடுவா கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 69,491 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!