Latestஉலகம்

1 மில்லியன் அமெரிக்க டோலர் மதிப்பிலான திருடப்பட்ட கலைப்பொருட்கள்; நேப்பாளத்திடம் மீண்டும் ஒப்படைத்தது அமெரிக்கா

நியூ யோர்க், டிச 10 – நேப்பாளத்திடமிருந்து திருடப்பட்ட ஒரு மில்லியன் டாலர் மதிப்பிலான 4 கலைப்பொருள்களை நேப்பாளத்திடம் திருப்பிக் கொடுத்துள்ளது அமெரிக்கா.
இந்துக் கடவுளான சிவனைச் சித்திரிக்கும் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரு முகக்கவசங்களும் அதில் அடங்கும்.

அவற்றை உருவாக்கியவர்களின் உறவினர்களின் வீட்டிலிருந்து 1990களில் அவை திருடப்பட்டுள்ளன. பல கலைப்பொருள்களைக் கடத்த உதவியதாகச் சந்தேகிக்கப்படும் சுபாஷ் கபூர் என்பவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கலைப்பொருள் மீட்கப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை கபூர் மற்றும் அவனின் கும்பலிடமிருந்து ஏறக்குறைய 2500க்கும் அதிகமான கடத்தப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு சுமார் 143 மில்லியன் டாலராகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!