Latestமலேசியா

1.35 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 39 மோட்டார் சைக்கிள்களுடன் மதுபானங்களும் டயர் கிடங்கில் பறிமுதல்

ஈப்போ, மே 29 – கடத்தி வரப்பட்ட  39 மோட்டார் சைக்கிள்களுடன் லைசென்ஸ் இன்றி  மதுபானங்களும்  பினாங்கு   Nibong Tebal லிலுள்ள  டயர் கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்கத்துறையினர்  பறிமுதல் செய்தனர்.  அவற்றின் மொத்த மதிப்பு 1.35 மில்லியன்  ரிங்கிட்டாகும். 

இதன் தொடர்பில்  30 வயதுடைய ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார் என பேரா  சுங்கத்துறையின்    இயக்குநர்  Datuk Abdul Ghafar Mohamad கூறினார்.  Sky Team    வகையைச் சேர்ந்த  அந்த   39 மோட்டார் சைக்கிள்களுக்கான  சுங்க வரி எதுவும் செலுத்தப்படவில்லை.  அந்த கிடங்கில்  356,383 ரிங்கிட்  வரி செலுத்தக்கூடிய  1,325 லிட்டர் மதுபானங்களும்  இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.   இம்மாதம்    13 ஆம் தேதி  மாலை  மணி 3.30  அளவில்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில்   அந்த  பொருட்கள்  பறிமுதல் செய்யப்பட்டன. 

 சீனாவிலிருந்து  கிள்ளான் துறைமுகம் வாயிலாக  அந்த மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக நம்பப்படுவதாக     Abdul Ghafar   தெரிவித்தார்.  இறக்குமதி செய்ததற்கான  அனுமதி எதனையும் அந்த கிடங்கு கொண்டிருக்கவில்லை . முறையான  ஆவணங்கள் எதுவும் இல்லாததால்  கடந்த மூன்று ஆண்டு ஆண்டு காலமாக அந்த மோட்டார்சைக்கிள்கள் விற்கப்படாமலேயே    இருந்திருப்பதும் தெரியவந்ததாக அவர்  கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!