Latestமலேசியா

1.632 மோசடிகளை பேங்க் இஸ்லாம் தடுத்துள்ளதோடு 11.7 மில்லியன் ரிங்கிட் வாடிக்கையாளர் பணத்தை காப்பாற்றியுள்ளது

கோலாலம்பூர், மே 24 – இவ்வாண்டு ஜனவரி முதல் நான்கு மாத காலத்தில் மோசடி தொடர்பான 1,632 சம்பவங்களை Bank Islam தடுத்துள்ளதோடு வாடிக்கையாளர்களின் 11.7 மில்லியன் ரிங்கிட்டிற்கும் கூடுதலான பணத்தை காப்பாற்றியுள்ளது. அந்த மோசடி சம்பவங்களை தடுப்பதில் விரைந்து செயல்பட்ட Bank Islam மின் ஹிரோக்கள் என அழைக்கப்படும் வங்கியின் பணியாளர்களே இந்த வெற்றிக்கு காரணம் என Bank Islam குழுமத்தின் தலைமை நடடிக்கை அதிகாரி Iran Moriff Mohd shariff தெரிவித்தார்.

அண்மையில் ஜோகூர் பாரு, Taman Bukit Indah கிளையில் காதல் மோசடி திட்டத்தை Bank Islam பணியாளர்கள் விரைந்து தடுத்து நிறுத்தியதன் மூலம் வாடிக்கையாளர் ஒருவருக்கு சொந்தமான இரண்டு லட்சம் ரிங்கிட்டிற்கும் மேல் பாதுகாக்கப்பட்டதாக அவர் கூறினார். மற்றொரு சம்பவத்தில் கோலாலம்பூர் வங்சா மாஜூவிலுள்ள எங்களது வங்கியின் பணியாளர்கள் கைதொலைபேசி மோசடித் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர் ஒருவர் இழக்கவிருந்த 500,000 ரிங்கிட் பணம் பாதுகாக்கப்பட்டதாக Iran Moriff சுட்டிக்காட்டினார். நாடு முழுவதிலும் உள்ள 135 கிளைகளிலும் போஸ்டர்கள் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இணைய மோசடி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை மேற்கொண்டுவருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!