Latestஉலகம்

1.8 மீட்டர் உயரமுள்ள கரடியை இரயில் மோதித் தள்ளியது; தண்டவாளத்தில் இரவை கழித்த பயணிகள்

தோக்கியோ, நவம்பர் 2 – ஹோக்கைடா நகரில், கடந்த திங்கட்கிழமை இரவு, இரயில் ஒன்று 1.8 மீட்டர் உயரமுள்ள கரடியை மோதித் தள்ளியது.

அதனால், சம்பந்தப்பட்ட இரயிலில் கோளாறு ஏற்பட்டு நகர முடியாத நிலை ஏற்பட்டதால், பாதுகாப்பு கருதி, வேட்டைக்காரர்கள் வரும் வரை பயணிகள் யாரும் இரயிலில் இருந்து வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

எனவே, அந்த இரயிலில் இருந்த எட்டு பயணிகள், வெப்பமூட்டும் சாதனம் இன்றி, கடும் குளிரில், இரயில் பெட்டியிலேயே இரவைக் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்தை சென்றடைந்த வேட்டைக்காரர்கள், இரவில் துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாததால், விடியும் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

எனினும், காலையில், இறந்து கிடக்க காணப்பட்ட அந்த கரடியை தண்டவாளத்திலிருந்து அகற்றிய பின்னரே, இரயில் பயணத்தை தொடர அனுமதிக்கப்பட்டது.

ஜப்பானில், அண்மைய சில காலமான கரடி தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!