
நியூசிலாந்து, ஜூன்-9-நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் (Wellington) 11 மீட்டர் உயரமுள்ள கடல் அலைகள் கரையைத் தாக்கியதால், கடலோரப் பகுதிகளில் வசித்த நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
மேலும் சில முக்கிய பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சில சாலைகளும் மூடப்பட்டுள்ளன.
பலத்த காற்று மற்றும் அலைகள் காரணமாக இரண்டு பெண்கள் கீழே விழுந்தனர்.
மேலும், மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் வெலிங்டன் விமான நிலையத்தில் சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய விமானமும் பலத்த காற்றால் சாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



