12வது தாமஸ் கிண்ணம் – மீண்டும் வாகை சூடியது சீனா; வெல்லும் முயற்சியில் தோல்வி கண்ட பிரான்ஸ்

ஹோர்சென்ஸ், மே-4-முதல் முறையாக தாமஸ் கிண்ணத்தை வென்று வரலாற்றை ஏற்படுத்த வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்த பிரான்ஸ் குழுவின் முயற்சியை சீனா முறியடித்தது.
நேற்று நடைபெற்ற தாமஸ் கிண்ண பேட்மிண்டன் போட்டியின் இறுதியாட்டத்தில் சீனா 3 -1 என்ற ஆட்டக் கணக்கில் பிரான்ஸ் குழுவை வீழ்த்தி தாமஸ் கிண்ணத்தை தற்காத்துக் கொண்டது.
முதலாவது ஒன்றையர் ஆட்டத்தில் சீனாவின் ஷீ யு கி ( Shi Yu Qi) 85 நிமிட போராட்டத்திற்குப் பின் உலகின் 4ஆவது ஆட்டக்காரரான கிறிஸ்தோ போபோவ்வை ( Chritso Pupov) வை 21-16 ,16-21. 21-17 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி சீனாவுக்கு முதல் வெற்றிப் புள்ளியை தேடித் தந்தார்.
இரண்டாவது ஒன்றையர் ஆட்டத்தில் Alex Lanier 21- 13, 21-10 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் Li shi Feng கை வென்றதன் மூலம் நிலைமை 1 -1 என்றானது.
எனினும் அதன் பிறகு நடைபெற்ற மூன்றாவது ஒன்றையர் ஆட்டத்தில் வெங் ஹோங் யாங் ( weng Hong Yang ) 22 -20, 20-22,21-19 என்ற புள்ளிக் கணக்கில் பிரான்சின் Junior Popov வை வீழ்த்தி சீனாவுக்கு இரண்டாவது வெற்றிப் புள்ளியை பெற்றுத் தந்தார்.
தொடர்ந்து நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் பட்டத்தை வெல்லும் முனைப்பில், உலகத் தரவரிசையில் 99-வது இடத்தில் உள்ள ஆடவர் இரட்டையர் ஜோடியான சீனாவின் ஹே ஜி டிங்-ரென் சியாங் யூ(He Ji Ting‑Ren Xiang Yu ) உலகத் தரவரிசையில் 52-வது இடத்தில் உள்ள எலோய் ஆடம்-லியோ ரோஸி இணையை (Eloi Adam‑Leo Rossi ) வீழ்த்தி, தீர்க்கமான வெற்றியைப் பதிவு செய்தனர்.
முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய பிறகு சீன ஜோடி இரண்டாவது செட்டில் 21-16 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றியை உறுதி செய்தது.
He Ji Tingகின் நேர்த்தியான net shot வலைக்குள் விழுந்து, சீனாவின் 12-வது தாமஸ் கிண்ணம் பட்டத்தைப் பெற்றுத் தந்ததைத் தொடர்ந்து சீனாவின் பேட்மிண்டன் வீரர்கள் ஆடுகளத்திற்குள் விரைந்து வந்து, ஒருவரையொருவர் சூழ்ந்துகொண்டு வெற்றியை கொண்டாடினர்.



