Latestமலேசியா

13 வயது சிறுமி லிஷாலினியின் தாயாரைத் தேடுகிறது கோலாலம்பூர் சமூக நலத்துறை

கோலாலம்பூர், ஆகஸ்ட்-23 – 13 வயது லிஷாலினி பன்னீர் செல்வம் (Lishalini a/p Pannir Selvam) என்ற சிறுமியின் தாயார் அல்லது அவரது வாரிசுகளைக் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச சமூக நலத்துறை (JKM) தீவிரமாகத் தேடி வருகிறது.

​அச்சிறுமியின் பெற்ற தாய் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், அவரது தந்தை 2021 டிசம்பர் 25-ஆம் தேதி காலமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அச்சிறுமி தற்போது தற்காலிகப் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

​எனவே, சம்பந்தப்பட்ட தாயார் அல்லது நெருங்கிய உறவினர்கள் உடனடியாக கோலாலம்பூர், ஜாலான் லூமுட்டில் உள்ள JKM அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், பாதுகாப்பு அதிகாரி Nur Ain Nabila Hanis என்பவரை 03-4010 4167 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது nurain.hanis@jkm.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!