
கோலாலம்பூர், ஆகஸ்ட்-23 – 13 வயது லிஷாலினி பன்னீர் செல்வம் (Lishalini a/p Pannir Selvam) என்ற சிறுமியின் தாயார் அல்லது அவரது வாரிசுகளைக் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச சமூக நலத்துறை (JKM) தீவிரமாகத் தேடி வருகிறது.
அச்சிறுமியின் பெற்ற தாய் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளதாகவும், அவரது தந்தை 2021 டிசம்பர் 25-ஆம் தேதி காலமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, 2001-ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ் அச்சிறுமி தற்போது தற்காலிகப் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட தாயார் அல்லது நெருங்கிய உறவினர்கள் உடனடியாக கோலாலம்பூர், ஜாலான் லூமுட்டில் உள்ள JKM அலுவலகத்திற்கு நேரில் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், பாதுகாப்பு அதிகாரி Nur Ain Nabila Hanis என்பவரை 03-4010 4167 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ அல்லது nurain.hanis@jkm.gov.my என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.



