Latestமலேசியா

அக்னிச் சித்திரம் எனும் Pyrography குறித்த புத்தக வெளியீடு – ஓவியர் சுகுமாரன் நாராயணன்

கோலாலம்பூர், மே 13 – ஓவியங்களின் வழியே தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வார்கள் ஓவியர்கள்.

அப்படி ஒரு புதுவிதமான ஓவியக் கலையின் வழி தனித்து நின்று அதில் உயர்ந்து நிற்பவர்தான் புகழ்பெற்ற ஓவியர் Pak Sugu என்றழைக்கப்படும் சுகுமாரான் நாராயணன்.

Pyrography எனும் அக்னிச் சித்திரம்தான், அவரின் ஓவியக் கலையாகும். 1987ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இந்த அக்னிச் சித்திரக் கலையில் தனது 38 ஆண்டு கால அனுபவத்தை, புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார் இவர்.

Pyrography ஓவியக் கலையை 5 வழிமுறைகளின் வழி கற்றுக்கொள்ள முடியும் என்பதை தனது புத்தக்கத்தில் எழுத்துகளால் பதிவு செய்துள்ளதாக ஓவியர் சுகுமாரன் நாராயணசாமி விவரித்தார்.

Pyrography கலை குறித்த இப்புத்தகமானது, மலேசிய ஒலிம்பிக் கவுன்சில் துணைத் தலைவர் டாக்டர் Mumtaz Jaffar முன்னிலையில் வெளியீடு கண்டது.

Pak Suguவின் கலை பயணம் குறித்து டாக்டர் Mumtaz Jaffar தமது உரையில் புகழாரம் சூட்டினார்.

ஓவியத்திற்கான நுணுக்கம், வழிமுறைகள், ஓவியங்கள் என அனைத்தும் உள்ளடங்கியுள்ள இப்புத்தகம், பலருக்கும் அக்னிச் சித்திரம் கலையை கையாள ஒரு வழிகாட்டியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார் pak Sugu.

இதனிடையே, 1000க்கும் மேல் அச்சிடப்பட்ட இப்புத்தகம் இலவசமாக கல்லூரி மாணவர்களுக்கும் ஓவியத்தைக் கற்றுக் கொள்ள விருப்பப்படும் மாணவர்களுக்கும் வழங்கப்படும் எனவும் Pak Sugu கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!