Latestஉலகம்சினிமாமலேசியா

16வது எடிசன் திரை விருது விழா; ஆசிய சிறந்த திரைப்படப் பிரிவில் மலேசியத் திரைப்படம் ‘நாம் கற்ற இசை’ விருது வென்றது

சென்னை, மார்ச் 25 – எடிசன் விருது வழங்கும் விழா கடந்த 15 வருடமாக சென்னையில் நடந்து வருகிறது.

இதனிடையே 16வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா நேற்று மீண்டும் சென்னையில் மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்தது.

பல்வேறு தலைப்புகளின் கீழ் பல விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு இவ்விழாவில் வழங்கப்பட்டது .

அதில் சிறந்த ஆசிய திரைப்படப் பிரிவில் நம் மலேசியத் திரைப்படமான ‘நாம் கற்ற இசை’ இடம்பிடித்திருந்தது.

இயக்குனர் பாரதிராஜா கைகளில் அந்த விருதை அந்த திரைப்படத்தில் நடித்த நம் மலேசிய நடிகர் இர்ஃபான் ஜைனி மற்றும் பிரெஸ்லி லேசில் பெற்றுக் கொண்டனர்.

உள்ளூர் திரைப்பட இயக்குநர் Saresh D’Seven கைவண்ணத்தில் மலர்ந்த ‘நாம் கற்ற இசை’ திரைப்படம் பல நடிகர்களை தாங்கி 2023ஆம் ஆண்டில் வெளிவந்தது.

இசையின் மேல் வேட்கை கொண்ட ஒரு பெண்ணின் பற்றியச் சுவாரசியமானக் கதையை இந்த திரைப்படம் சித்தரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!