Latestமலேசியா

16 வயது சிறுமி பாலியல் சுரண்டலிலிருந்து மீட்பு; இருவர் கைது

ஆராவ், அக்டோபர்-21,பெர்லிஸ் ஆராவில் பாலியல் ரீதியாக வேட்டையாடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 16 வயது சிறுமியைப் போலீஸார் மீட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு நடத்தப்பட்ட ‘Ops Noda’ நடவடிக்கையின் போது, 15 மற்றும் 19 வயதுடைய இரு வாலிபர்களைப் போலீஸார் கைதுச் செய்தனர்.

சமூக ஊடகச் செயலியான MiChat மூலம் பாலியல் தொழிலை விளம்பரப்படுத்தி, சிறுமியைப் பாலியல் ரீதியாகச் சுரண்டியதாக அவர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆள் கடத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறார்களுக்கு எதிரான சுரண்டல் சம்பவங்களைத் தடுக்க, குற்றச் செயல்கள் தொடர்பான தகவல்களைப் பொது மக்கள் போலீஸாரிடம் தெரிவிக்க வேண்டும் எனப் பெர்லிஸ் மாநிலப் போலீஸ் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!