Latestமலேசியா

மடானி பொருளாதாரக் கட்டமைப்பு, PKMS உயர்வுக்கு உதவும்; டத்தோ ரமணன்

கோலாலம்பூர், மார்ச் 14 –பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிமுகப்படுத்திய மடானி பொருளாதாரக் கட்டமைப்பு, குறு, சிறு மற்றும் எளிய தொழில் துறையின் தரத்தை உயர்த்துவதில் வணிக மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சிற்கு (KUSKOP) உதவும் என கூறியுள்ளார் டத்தோ ரமணன்.

‘மடானி தொழில்முனைவோர், பொருளாதாரத்தை இயக்குதல்’ என்ற கருப்பொருளுடன் KUSKOP 2024 வியூக திட்டமிடல் ஆவணத்தின் வழி தெளிவாகிறது என தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சரான டத்தோ ரமணன் தெரிவித்தார்.

இந்த வியுக திட்டமிடலைச் செயல்படுத்துவது வழி மலேசியாவை 30ஆவது பெரிய பொருளாதார சக்தியாக உருமாற்றும் இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டார்.

ஐந்து வியூகங்களக் உள்ளடக்கி, 22 உத்திகள் மற்றும் 205 திட்டங்களை கோடிட்டுக் காட்டும் இந்த KUSKOP 2024 திட்டமிடல் ஆவணத்தில் மூலம் 600,000 க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக டத்தோ ரமணன் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!