Latestமலேசியா

182,000 பேருக்கு பயணக் கட்டுப்பாடு – வருமான வரி வாரியம் விதித்தது

கோலாலம்பூர், ஏப் 1 – வருமான வரி பாக்கித் தொகையை செலுத்த தவறியதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதிவரை 182,666 பேர் வெளிநாடுகள் செல்வதற்கான பயணக் கட்டுப்பாட்டை வருமான வரி வாரியம் விதித்துள்ளது. இவர்களில் 171,571 பேர் வருமான வரி பாக்கி தொகையை செலுத்தாமல் உள்ளனர். இதர 11,095 தனிப்பட்ட நபர்கள் நில வரிக்கான இலாபா பாக்கி தொகையை செலுத்தாமல் இருப்பதாக நிதித்துறை துணையமைச்சர் Lim Hui Ying தெரிவித்திருக்கிறார்.

வெளிநாடுகளுக்கான பயண கட்டுப்பாட்டை விதிப்பதற்கு முன் வருமான வரித்துறை வாரியம் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களுக்கு பல்வேறு கடிதங்கள் வாயிலாகவும் மின் அஞ்சல் மூலமாகவும் வரி பாக்கி குறித்து நினைவுறுத்தியிருப்பதையும் Lim Hui Ying அவர் சுட்டிக்காட்டினார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் வரி செலுத்த தவறியோருக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக Lim Hui Ying இன்று மேலவையில் டத்தின் Ros Suryati எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது தெரிவித்தார். மலேசிய குடிநுழைவு துறையின் இணையத் தளம் மற்றும் MyTax செயலி மூலம் தங்களுக்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடு குறித்த தகவல்களை வரி செலுத்தத் தவறியோர் தெரிந்துகொள்ளலாம் என அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!