Latestமலேசியா

2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுக்கள் பறிமுதல்

கோலாலம்பூர், நவ 27 – இவ்வாண்டு பேரா சுங்கத்துறை 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள வெள்ளை சிகரெட்டுக்கள் மற்றும் இந்தோனேசியாவில் தயாரிக்கப்படும் கிரெட்டெக் (Kretek) கடத்தல் சிகரெட்டுக்களை பறிமுதல் செய்துள்ளது. பேராவில் பந்தாய் ரெமிஸ் மற்றும் சித்தியவான் வட்டாரத்தில் அதிக அளவில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக பேரா சுங்கத்துறை இயக்குனர் டத்தோ அப்துல் கபார் முகமட் தெரிவித்தார். கிரெட்டெக் மற்றும் இதர வகை சிகரெட்டுகள் கடல் வழியாக கடத்தப்பட்டு அவை குடியிருப்பு பகுதிகளில் மறைத்து வைக்கப்படுவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இரண்டு அதிரடி சோதனை நடவடிக்கைகளில் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக அப்துல் கபார் கூறினார்.

சித்தியவானில் பாதுகாவலர் வசதியைக் கொண்ட ஒரு வீட்டில் கடத்தல் சிகரெடுக்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதையும் சுங்கத்துறையினர் கண்டுப்பிடித்தனர். உள்நாட்டு சந்தைக்காக வியட்னாமிலிருந்து கடத்திவரப்பட்ட சிகரெட்டுக்களையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுல் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!