Latestஉலகம்

20 மடங்கு பெரிய ப்ளூபெர்ரி

ஆஸ்திரேலிய, மார்ச் 16 – அஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ்ல் உள்ள கோஸ்டா குழு நிறுவனத்தால் வளர்க்கப்பட்ட ப்ளூபெர்ரி, உலகின் மிகப்பெரிய ப்ளூபெர்ரி பழம் வளர்த்து சாதனை படைத்துள்ளது.

நவம்பர் மாதம் பறிக்கப்பட்ட இந்த பழத்தின் எடை 20.4 கிராம் என கணக்கிடப்பட்டுள்ளது. பொதுவாகவே, ஒரு சாதாரண ப்ளூபெர்ரியின் எடை 1 கிராம் முதல் 3.5 கிராம் வரை இருக்குமாம். ஆனால் இந்த பிரம்மாண்டமான ப்ளூபெர்ரி 39.91 மில்லிமீட்டர் அகலத்துடன் சுமார் பத்து மடங்கு அதிகம்.

சாதனை படைத்த இந்த பழம் ‘Eterna’ என்ற தனித்துவமான பழ வகையைச் சார்ந்தது. பெரிய ப்ளூபெர்ரிகளுக்கான மக்களின் விருப்பதினால், கோஸ்டா குழு நிறுவனத்தால் இது உருவாக்கப்பட்டது.

“பழம் பெரியதாக இருந்தாலும், ப்ளூபெர்ரியை உருவாக்கும்போது எதிர்பார்க்கப்படும் தரம் அல்லது சுவையில் எந்த சமரசமும் இருக்காது” என கோஸ்டா குழு நிறுவனத்தின் பயிர் தோட்டக்கலை வல்லுநரான Hocking கூறுகிறார்.

இந்த ப்ளூபெர்ரியை சாப்பிட திட்டம் இல்லாத நிலையிலி அப்பழம் தற்போது பனியில் உறைவைக்கப்பட்டிருக்கிறது.

இந்த சாதனை படைத்த ப்ளூபெர்ரி பழம் இந்த வாரம் கின்னஸ் உலக சாதனையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!