Latestமலேசியா

2,000 த்திற்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் தீர்க்கப்பட்டன

கோத்தாபாரு, மே 29 – கூட்டரசு அரசியலமைப்பு சட்டத்தின்  15 ஆவது ஷரத்து   பிரிவு  (2)ன்  கீழ்  இவ்வாண்டு மே  மாதம் 24ஆம்தேதி வரை நாடு முழுவதிலும்  பெறப்பட்ட  விண்ணப்பங்களில்  2,373 பேரின்  குடியுரிமை விண்ணப்பங்களுக்கு  உள்துறை அமைச்சு தீர்வு கண்டுள்ளது.  இந்நாட்டின் குடியுரிமையை பெற்ற தாய்மார்களுக்கு வெளிநாடுகளில் பிறந்த  பிள்ளைகளின்  குடியுரிமை விண்ணப்பங்கள்  அங்கீகரிக்கப்பட்டதாக   தேசிய பதிவுத்துறையின்   தலைமை இயக்குநர்  Badrul Hisham  Alias  தெரிவித்தார்.   MADANI அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு ஏற்ப  அனைத்து விண்ணங்களையும் உள்துறை அமைச்சு   அங்கீகரித்தது. 

 வெளிநாடுகளில் திருமணம் செய்தவர்கள்  தங்களது திருமணத்தை  மீண்டும் மலேசியாவில் பதிவு செய்யாமல்   அல்லது  திருமணத்தை முறைப்படுத்த  தவறியதால்  Kedah,  Kelantan , Perlis  போன்ற  நாட்டின்  எல்லை மாநிலங்களில் பிறந்த பிள்ளைகள் தாமதமாக பதிவு செய்யட்டதாக  அவர் கூறினார்.   திருமணத்தை பதிவு செய்யத் தவறியது மற்றும் முறையான வகையில் திருமணம்  செய்யத் தவறியது போன்ற காரணங்களால்   பிறந்த பிள்ளைகள்   அடையாள  ஆவணங்கள்  இல்லாமல் இருப்பதாக  Badrul Hisham  தெரிவித்தார்.     தம்பதியரில் ஒருவரின்  அனுமதியின்றி  வெளிநாடுகளில் செய்யப்படும் இரண்டாவது திருமணம் குறித்து உள்நாட்டில்  பதிவு செய்யாத காரணத்தினால்   அவர்களது பிள்ளைகளை பதிவு செய்வதில்  சிக்கல்  ஏற்படுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!