Latestமலேசியா

20,000 ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக சிலாங்கூரில் ஊராட்சி மன்ற இயக்குனர் கைது

ஷா அலாம், ஜூன் 5 – 20,000 ரிங்கிட் லஞ்சம் கேட்டது மற்றும் அதனை பெற்ற சந்தேகத்தின் பேரில் சிலாங்கூரில் உள்ள ஊராட்சி மன்றத்தின் இயக்குனர் ஒருவரை MACC கைது செய்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் விதிமுறைக்கு அப்பாற்பட்டு நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்ததை மாற்றியமைப்பதற்கான விண்ணப்பத்தை விரைந்து அங்கீகரித்ததற்காக அவர் கையூட்டு பெற்றதாக நம்பப்படுகிறது. சிலாங்கூர் எம்.ஏ.சி.சி தலைமையத்தற்கு வாக்குமூலம் வழங்க முன்வந்தபோது 40 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழி நேற்று மாலை 6 மணியளவில் கைது செய்யப்பட்டதை சிலாங்கூர் MACC இயக்குனர் டத்தோ அலியாஸ் சலிம் ( Alias Salim ) உறுதிப்படுத்தினார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த நபரை மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்கும் உத்தரவுக்கு மாஜிஸ்திரேட் ஷாபிக் சுலைமான் ( Syafiq Sulaiman ) அனுமதித்தார். 2019ஆம் ஆண்டு முதல் 2024 ஆம்ஆண்டுவரை அந்த நபர் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்டது. சம்பந்தப்பட்ட குத்தகையாளர்கள் அந்த சந்தேக நபரின் வங்கிக் கணக்கில் பணத்தை பட்டுவாடா செய்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!