Latestமலேசியா

2021 LRT விபத்து; Rapid Rail-லுக்கு APAD விதித்த RM100,000 அபராதம் நிலைநிறுத்தம்

கோலாலம்பூர், ஏப்ரல்-11-2021-ஆம் ஆண்டு நடந்த கிளானா ஜெயா LRT இரயில் விபத்து தொடர்பாக, தரை பொது போக்குவரத்து நிறுவனமான APAD, Rapid Rail-லுக்கு விதித்த RM100,000 அபராதம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த அபராதம், இரயில் அமைப்பின் பராமரிப்பு குறைபாடுகள் காரணமாக விதிக்கப்பட்டதாக APAD தெளிவுப்படுத்தியது.

2021 மே மாதத்தில் நடந்த இந்த விபத்து, மலேசியாவின் மிக மோசமான இரயில் விபத்தாகக் கருதப்படுகிறது.

இதில் 213 பயணிகள் காயமடைந்தனர், அவர்களில் 47 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காதவாறு இரயில் சேவை நடத்துநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் APAD வலியுறுத்தியுள்ளது.

இந்த அபராதத்தை APAD உறுதிப்படுத்தியிருப்பது, பொது மக்கள் பாதுகாப்புக்கும் பொறுப்புணர்வுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை காட்டுகிறது.

இவ்விபத்தில் காயமடைந்த ஏராளமான பயணிகள், சேவையில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி, Rapid Rail மற்றும் அதன் தாய் நிறுவனமான Prasarana Malaysia Bhd-க்கு எதிராக, வழக்குத் தொடுத்துள்ளதும் குறிப்பிபிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!