Latestமலேசியா

மாலுரி MRT நிலையம் அருகே சட்டவிரோதமாக வாகன நிறுத்தக் கட்டணம் வசூலித்த நபர் கைது

கோலாலம்பூர், நவம்பர்-15,கோலாலம்பூர், Maluri MRT நிலையத்திற்கு அருகே வாகனமோட்டிகளிடம் சட்டவிரோதமாகக் கார் நிறுத்துமிடக் கட்டணம் வசூலித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட இடத்தில் வாகன நிறுத்தம் இலவசம் என அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்த போதிலும், சில நபர்கள் வாகனமோட்டிகளிடம் தலா 5 ரிங்கிட் கட்டணம் வசூலிப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களும் புகார்களும் முன்னதாக வைரலாகின.

இதனைத் தொடர்ந்து, அப்பகுதியின் நிர்வாக நிறுவனமான ParkIt Malaysia அளித்த போலீஸ் புகாரின் அடிப்படையில், செராஸ் மாவட்டப் போலீஸார் நேற்று பிற்பகல் 2 மணியளவில் சந்தேக நபரைக் கைதுச் செய்தனர்.

மாவட்டப் போலீஸ் தலைவர் உதவி ஆணையர் Mohd Rosdi Daus இதனை உறுதிப்படுத்தினார்.

அப்பகுதியில் கட்டணம் வசூலிக்க எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் உரிமம் வழங்கப்படவில்லை என நிலம் மற்றும் சுரங்க இலாகா அலுவலகமும் உறுதிச் செய்துள்ளது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கண்டறியப் போலீஸுக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ள Parkit Malaysia, இத்தகைய மோசடிகள் தொடர்பான இரசீதுகள் அல்லது QR குறியீடுகள் இருந்தால் பகிருமாறு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!