Latestமலேசியா

BN-PN வெற்றியைக் கொண்டாட மலாக்காவில் நாளை சிறப்பு பொது விடுமுறை அறிவிப்பு

மலாக்கா, நவம்பர்-15,மலாக்கா மாநிலத்தில் நாளை, நவம்பர் 16-ஆம் தேதி திங்கட்கிழமை, சிறப்பு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற 16-ஆவது மலாக்கா சட்டமன்றத் தேர்தலில், பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாநில முதல்வர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரவூஃப் யூசோ, இன்று இரண்டாவது தவணையாகப் பதவியேற்ற பின்னர் இதனை அறிவித்தார்.

தேர்தலில் BN-PN கூட்டணிக்கு வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய மக்களைப் பாராட்டும் வகையிலும் இந்தச் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் பாரிசான் நேஷனல் 21 இடங்களையும், பெரிக்காத்தான் நேஷனல் மூன்று இடங்களையும் கைப்பற்றின.

பக்காத்தான் ஹராப்பான் DAP வாயிலாக வெறும் 4 இடங்களில் வெற்றிப் பெற்றது.

இதன் மூலம் BN-PN கூட்டணி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் மலாக்காவில் ஆட்சியை அமைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!