Latestமலேசியா

2022ல் விவாகரத்து எண்ணிக்கை 43 விழுக்காடு அதிகரித்துள்ளது

பெட்டாலிங் ஜெயா, நவ 23 – நாட்டில் விவாகரத்து சம்பவங்கள் 2022ல் 43.1 விழுக்காடு உயர்ந்திருப்பதாக தேசியப் புள்ளி விவரத் துறை தெரிவித்துள்ளது.

2021-ல் 43,936ஆக பதிவான விவாகரத்து சம்பவங்கள், 2022ல் 62,890 ஆக உயர்வு கண்டுள்ளது.
இதில் முஸ்லிம்களின் விவாகரத்து சம்பவங்கள் 45 விழுக்காடு உயர்ந்துள்ளது. முஸ்லிம் விவாகரத்து சம்பவங்கள் மிக அதிகமாக கெடா, பெர்லிஸ் மற்றும் சபாவில் பதிவாகியுள்ளன.
முஸ்லிம் அல்லாதாரின் விவாகரத்து சம்பவங்கள் 2021ல் 12,286 ஆக இருந்த வேளை 2022ல் 16,752 ஆக பதிவானது.

விவாகரத்து சம்பவங்கள் மிக அதிகமாக 35லிருந்து 39 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மத்தியிலும் 30-34 வயதுக்கு உட்பட்ட பெண்கள் மத்தியிலும் நிகழ்ந்திருப்பதாக அத்துறை தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!