Latestமலேசியா

2022 ஆண்டில் புற்று நோயினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

கோலாலம்பூர், பிப் 5 – மலேசியாவில் 2022 ஆம் ஆண்டு பெரிய அளவில் மரணத்தை ஏற்படுத்திய நான்காவது நோயாக புற்றுநோய் திகழ்கிறது. 2021 ஆம் ஆண்டு 10.5 விழுக்காட்டினர் புற்றுநோயினால் மரணம் அடைந்ததை ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 12. 6 விழுக்காடாக உயர்ந்ததாக சுகாதார அமைச்சர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்திருக்கிறார். மலேசிய சுகாதார அமைச்சு வெளியிட்ட 2023 ஆம் ஆண்டின் புள்ளி விவர தகவல்படி தனியார் மருத்துவமனைகளில் ஏற்பட்ட மரண எண்ணிக்கையிலும் புற்றுநோய் அதிகரித்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் இறந்தவர்களில் 26.44 விழுக்காட்டினர் புற்றுநோய் பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தனர். சுகாதார அமைச்சின் மருத்துவமனையில் மரணங்களை ஏற்படுத்திய நான்காவது மிகக்பெரிய நோயாகவும் புற்றுநோய் இருந்ததாக சுல்கிப்ளி கூறினார். 60 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் புற்றுநோயின் பாதிப்பு 3ஆவது மற்றும் 4 ஆவது நிலைக்கு உள்ளான பிறகே தங்களுக்கு அந்நோய் இருப்பதை கண்டறிந்தனர் என மலேசிய புற்றுநோய் சங்கத்தின் புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன. 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம்ஆண்டு வரையிலான 5ஆண்டு காலத்தில் 168,822 பேர் புற்றுநோயின் பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்களில் பெரும்பாலோர் கருப்பை நுழைவாயில் புற்றுநோய்,
பெருங் குடல், நுரையீரல் மற்றும் ஈரல் புற்று நோயின் பாதிப்புக்கு உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!