Latestசிங்கப்பூர்

2024 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் சிங்கப்பூர் இடம்பிடித்தது

சிங்கப்பூர், ஜன 11 – புதிய ஆண்டு பிறந்து இருக்கும் நிலையில், உலகின் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டுகளின் வரிசையில் 5 நாடுகளின் கடவுச்சீட்டுகள் முதன்மை இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

10 ஜனவரி அன்று “Henley Passport Index” வெளியிட்ட தரவரிசையில் 227 நாடுகளில் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் ‘visa-free entry’ பயணிக்க அனுமதிக்கும் பிரான்ஸ், ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி, ஸ்பேயின் மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் முதன்மை இடத்தை பிடித்துள்ளன. 

இதில் 2023 ஆம் ஆண்டில், 192 நாடுகளுக்குப் பயணிக்க விசா இல்லாமல் அனுமதிக்கும் சிங்கப்பூரின் கடவுச்சீட்டு முதலிடத்தில் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கத்து. 

அதேபோல், 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க அனுமதி வழங்கியுள்ள ஜெர்மன், இத்தாலி, ஸ்பேயின் ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளன. 

ஜப்பான் மற்றும் பிரான்ஸ்னுடன், ஆஸ்திரியா, பின்லாந்து, லக்சம்பர்க், தென் கொரியா மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் வைத்திருப்பவர்களால், 189 நாடுகளில் விசா இல்லாமல் நுழைய முடியும் என்பதால், அந்த நாடுகள் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளன.

இதற்கிடையில், இத்தாலி நாட்டை இணைத்தது தொடர்ந்து மலேசியாவின் பாஸ்போர்ட் வைத்திருப்போர் 182 நாடுகளுக்கு விசா இன்றி பயணிக்கலாம். இதன் அடிப்படையில், மலேசியா 12ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இந்நிலையில் உலகளில் மிகவும் பலவீனமான கடவுச்சீட்டுகள் கொண்டிருக்கும் நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடத்தில் உள்ளது

ஆப்கானிஸ்தான் பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு 28 நாடுகளுக்கு மட்டுமே விசா இன்றி பயணிக்க முடியும். இதனை தொடர்ந்து ஈராக், சிரியா, பாகிஸ்தான், ஏமன் ஆகிய நாடுகளும் இடம்பிடித்துள்ளன.

 இந்த தரவரிசையானது சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!