Latestமலேசியா

2025 ஆசியான் திறன்கள் ஆண்டை ஏற்று நடத்த மலேசியா விருப்பம்

புத்ராஜெயா, ஜூன்-15 –  அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பான ILO-வின் ஒத்துழைப்புடன் 2025 ஆசியான் திறன்கள் ஆண்டை ஏற்று நடத்தும் கடப்பாட்டை மலேசியா உறுதிச் செய்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடைபெற்ற 9 ஆசியான் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பின் போது, மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் (Stevan Sim) மலேசியாவின் அவ்விருப்பத்தைத் தெரிவித்தார்.

ஆசியான் வட்டார நாடுகளுக்கு இடையில் அணுக்கமான திறன் தேர்ச்சி ஒத்துழைப்புக்கு அது வழி வகுக்கும் என அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

ஆசியான் ஆள் பலத்தின் அறிவாற்றலையும் திறன்  தேர்ச்சியையும் அதிகரிக்கவல்ல முன்னெடுப்புகளில், மனிதவள அமைச்சின் கீழுள்ள HRDCorp உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபடவும் வாய்ப்பேற்படும் என்றார் அவர்.

அதிநவீன தொழில்நுட்பமான AI போன்ற துறைகளுக்கு முதலீடுகளையும் கவர முடியும் என ஸ்டீவன் கூறினார்.

2025 ஆசியான் திறன்கள் ஆண்டானது, தென்கிழக்கு ஆசியா முழுவதும் பல்வேறு திட்டங்கள் மற்றும் நன்முயற்சிகளை உள்ளடக்கியிருக்கும்.

தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சி (NHCCE), மனித மூலதன மேம்பாட்டில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி விவாதிக்க உலகெங்கிலும் உள்ள தொழில்துறை பிரமுகர்களை ஒன்றிணைக்கும் HRD Corp இன் முக்கிய வருடாந்திர நிகழ்வும் அவற்றில் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!