Latestமலேசியா

2026ஆம் ஆண்டின் புதிய கல்வியாண்டு, பாடத்திட்டதை பாதிக்காது

ஜொகூர் பாரு, மார்ச் 11 – 2026 ஆம் ஆண்டு முதல் மாணவர்களின் புதிய கல்வியாண்டு ஜனவரிக்கு திரும்பும் நடவடிக்கையை தொடர்ந்து பள்ளி பாடத்திட்டம் பாதிப்படையாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் மாணவர்களின் கல்வி கற்பித்தலுக்கு இடையூறாக இருக்காது என்பதுடன் எப்போதும் போலவே பாடங்கள் வகுப்பில் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சகம் உறுதியளித்துள்ளதாக கல்வி தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் தெரிவித்தார்.

ஓர் ஆண்டிற்கு மொத்தம் 150 பள்ளி நாட்களுடன் பாடத்திட்டம் வழக்கம் போல் நடத்தப்படும். இதற்கு பள்ளி விடுமுறையில் சற்று மாற்றம் இருப்பதுடன், விடுமுறை நாட்கள் குறைக்கப்படும் என்றும் அவர் விளக்கினார்.

இதனிடையே நேற்று, ஜோகூர்,கெடா,கிளாந்தான் ,திரங்கானு ஆகிய மாநிலங்களில் தொடங்கியுள்ள இந்த ஆண்டு பள்ளி அமர்வில் மொத்தம் 1.44 மில்லியன் மாணவர்கள் நுழைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!