Latestமலேசியா

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்த மலேசியா மறுப்பு

கோலாலம்பூர், மார்ச் 22 – 2026 ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தும்படி விடுக்கப்பட்ட அழைப்பை மலேசியா ஏற்றுக்கொள்ளாது என இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் Hannah Yeoh தெரிவித்திருக்கிறார். காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்துவதற்கான செலவுகள் மற்றும் இதர விளைவுகள் உட்பட அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பின்னர் அமைச்சரவை இந்த முடிவு எடுத்தாக அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். எனவே 2026ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை ஏற்று நடத்தும்படி காமான்வெல்த் விளையாட்டு சம்மேளனம் விடுத்த அழைப்பை மலேசியா ஏற்றுக்கொள்ளாது என அவர் கூறினார்.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஆஸ்திரேலியாவின் விக்டோரியா நகரில் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் போட்டியை நடத்தும் முடிவை ஆஸ்திரேலியா மீட்டுக்கொண்டதைத் தொடர்ந்து மலேசியா இப்போட்டியை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு இதற்காக 602 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி வழங்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடக்கத்தில் கணிக்கப்பட்ட செலவை விட போட்டியை நடத்துவதற்கான செலவு அதிகரிக்கும் என்பதால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை நடத்தும் முடிவிலிருந்து ஆஸ்திரேலிய பின்வாங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!