Latestமலேசியா

2026-ரில் நாட்டை கடுமையான வறட்சி தாக்கக்கூடும்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22 – நாட்டின் சில பகுதிகளில் அதீத வெப்பமான வானிலை பதிவாகி வருகிறது.

எனினும் இது உச்சம் இல்லை. அடுத்தாண்டும், 2026-ஆம் ஆண்டும் இந்நிலை மேலும் மோசமடையலாம்.

அதனை எதிர்கொள்ள மலேசியர்கள் தயாராக இருக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஐநாவின், காலமாற்றம் மீதான மலேசியாவின் மூன்றாவது தேசிய தொடர்பு மற்றும் இரண்டாவது இருபதாண்டு புதுப்பிப்பு அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம் சுற்றுசூழல் மற்றும் பருவநிலை மாற்றம் மீதான அமைச்சு 2018-ஆம் ஆண்டு அந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

அந்த காலகட்டத்தில், வறட்சியான வானிலை 36.3 விழுக்காடு வரை மழைப் பொழிவைக் குறைக்கும் என கூறப்படுகிறது.

மழைப்பொழிவு மூல நீர் விநியோகம் உட்பட நெல் அறுவடை, ரப்பர் மற்றும் செம்பனை விளைச்சலையும், கால்நடைகளையும் பாதிக்கும்.

2030 முதல் 2050 பருவ நிலை மாற்றத்தின் போது, நாட்டிலுள்ள நெல் வயல்களில், உற்பத்தி ஆறு முதல் 31 விழுக்காடு வரையில் குறையலாம்.

இந்நிலையில், திரங்கானுவிலுள்ள, சுங்கை டுங்குன், சுங்கை கெமமான் ஆகிய ஆறுகள் மிக மோசமாக பாதிக்கப்படும் பகுதிகளில் அடங்கும் என கூறப்படுகிறது.

நாட்டிலுள்ள சில அணைக்கட்டுகளில் நீரின் அளவு, 50 விழுக்காட்டிற்கும் குறைவாக ஆபத்தான நிலையில் பதிவாகும்.

எதிர்காலத்தில், சரவாக் மாநிலத்திலும் அந்நிலை விரிவடையுமென எதிர்ப்பார்க்கப்படும் வேளை ; சபா பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!