Latestமலேசியா

2027-இல் புதுமணத் தம்பதிகளுக்கு RM500 திருமண உதவித்தொகை – பினாங்கு அரசு அறிவிப்பு

ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-31 – பினாங்கில் அடுத்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளும் தகுதியான புதுமணத் தம்பதிகளுக்கு, மாநில அரசு ஒருமுறை உதவித்தொகையாக 500 ரிங்கிட் வழங்கவுள்ளது.

2027-ஆம் ஆண்டுக்கான பினாங்கு மாநில வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்தபோது, முதல்வர் Chow Kon Yeow இதனை அறிவித்தார்.

Mempelai Emas எனப்படும் இப்புதிய திட்டம், மாநில அரசின் i-Sejahtera நலத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ளது.

இதனிடையே, தகுதியான e-hailing ஓட்டுநர்களுக்கு அடுத்தாண்டு ஒருமுறை உதவியாக 600 ரிங்கிட் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பினாங்கு மாநில அரசு ஊழியர்களுக்கு ஒரு மாதச் சம்பளத்திற்கு இணையான சிறப்பு நிதியுதவி, வரும் டிசம்பர் மாதம் வழங்கப்படும்.

பினாங்கு மாநிலத்தின் 2027 பட்ஜெட்டில், நிர்வாகச் செலவுகளுக்கு 1.042 மில்லியன் ரிங்கிட்டும், மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 280.17 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!