Latestமலேசியா

2030 இலக்கை நோக்கி தகவல் தொடர்பு, பல்லூடகத் துறையின் நிலைத்தன்மையை வலுப்படுத்தும் ‘LESTARI’

கோலாலம்பூர், செப்-28-தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகத் துறைக்கான ‘LESTARI: நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு மற்றும் செயல்வரைபடம் 2030’ (SFR2030)-ஐ தொடர்புத்துறை அமைச்சர் Datuk Seri Fahmi Fadzil இன்று தொடங்கி வைத்தார். மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையமான MCMC உருவாக்கிய அக்கட்டமைப்பு, 2030ஆம் ஆண்டு வரை துறையின் நிலைத்தன்மைக்கான வழிகாட்டியாக அமையும்.

LESTARI மூலம் மின்னணுக் கழிவுகளைக் குறைத்தல், சாதனங்களை மறுபயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். 15 மில்லியன் சாதனங்களை நிலைத்தன்மையுடன் நிர்வகிப்பதுடன், குறைந்த வருமானம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான தொழில்நுட்ப அணுகலை மேம்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

47 நிறுவனங்களைச் சேர்ந்த 116 பங்கேற்பாளர்களின் கலந்தாய்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட LESTARI, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, சமூகத் தாக்கம் மற்றும் உள்ளடக்கிய தன்மை, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகிய மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இதனிடையே, கார்பன் உமிழ்வைக் குறைத்தல் மற்றும் சாதனங்களின் மறுபயன்பாடு, மறுசுழற்சியை ஊக்குவிக்க ‘Net Zero & Circularity Alliance’ (NZCA) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. LESTARI மற்றும் NZCA-க்கு டிஜிட்டல் துறையைச் சேர்ந்த 15 நிறுவனங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

LESTARI-யின் நடவடிக்கைகள் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளின் அடிப்படையில் கண்காணிக்கப்படும். அத்திட்டம் Malaysia MADANI, 13 ஆவது மலேசியத் திட்டம், NETR மற்றும் 2050 ஆம் ஆண்டுக்குள் நிகர-பூஜ்ஜிய பசுமை இல்லா வாயு வெளியேற்றத்தை அடையும் நாட்டின் இலக்குகளுக்கு ஏற்ப இணைந்து செயல்படும்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!