
கிள்ளான், ஏப்ரல்-22-219-ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் ஏற்பாட்டில், இன்று காலை சிறப்பு கிறிஸ்துவ பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது.
கிள்ளான், Our Lady of Lourdes கத்தோலிக்க தேவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் என சுமார் 60 பேர் கலந்துகொண்டனர்.
தென் கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைவர், ACP Lim Jit Huey தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, சிறப்பு பிரார்த்தனை மற்றும் கீதங்களுடன் தொடங்கியது.
தனது உரையில், நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக பிரார்த்தித்த அவர், இந்த ஒருங்கிணைப்பிற்கு தேவாலய நிர்வாகத்திற்கு நன்றியையும் தெரிவித்தார்.
விழாவின் சிறப்பம்சமாக 219-ஆவது போலீஸ் தினத்தை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தேவாலய பாதிரியார்களுக்கு ஏசிபி லிம் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்.
போலீஸ் தினத்தில் சமய நல்லிணக்கம் கடைப்பிடிக்கப்பட்டது குறித்து உதவி பங்குத்தந்தை REV. FR. GNANA SELVAM BERENTIS வணக்கம் மலேசியாவிடம் பேசினார்.
“போலீஸ் துறையும் மக்களும் பிரிக்க முடியாதவர்கள்” என்ற கருப்பொருளுக்கேற்ப, விருந்து உபசாரத்துடன் இந்த நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.



