F1 போட்டி மலேசியாவுக்குத் திரும்பும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது

புடாபெஸ்ட், ஜூலை-24-F1 பந்தய அட்டவணையில் மலேசியா மீண்டும் இடம் பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் மோதல்கள் காரணமாக Bahrainனில் அப்பிரசித்தி பெற்றப் பந்தயம் நடத்தும் நம்பிக்கை குறைந்து வருவதால், மாற்று இடமாக மலேசியா தேர்ந்தெடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஈரான் போர் காரணமாக Sakhir மற்றும் சவுதி அரேபியா, Jeddahவில் நடைபெற அட்டவணையிடப்பட்டிருந்த ஏப்ரல் மாதப் பந்தயங்கள் இரண்டும் இதற்கு முன் ரத்து செய்யப்பட்டன. எனவே Bahrainனில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அங்கும் சாதககமான சூழ்நிலை காணப்படவில்லை.
எனவே பல மாற்று இடங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் எதுவும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மலேசியாவின் Sepang பந்தயத்தளம் பரிசீலிக்கப்படும் இடங்களில் ஒன்றாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் 26ல் நடைபெறும் Baku பந்தயத்திற்கும் அக்டோபர் 11றில் நடைபெறும் சிங்கப்பூர் பந்தயத்திற்கும் இடையில் மலேசியாவில் நடத்தப்படலாம். முடிவு ஆகஸ்ட் மாதம் தெரிய வரலாம்.
மலேசியா ஆகக் கடைசியாக 2017-ல் F1 பந்தயத்தை நடத்தியது. உள்நாட்டு நிறுவனமான Petronas தற்போது F1னில் முன்னணியில் உள்ள Mercedes குழுவின் பங்காளியாகவும் இருக்கிறது.



