Latestஉலகம்

25 ஆயிரம் யூரோ விலையில், வாங்கும் சக்திக்கு உட்பட்ட மின்சார கார்; டெஸ்லா திட்டம்

ஜெர்மனி, நவம்பர் 7 – மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா (Tesla), 25 ஆயிரம் யூரோ அல்லது ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 229 ரிங்கிட் விலையில், வாங்கும் சக்திக்கு உட்பட மின்சார கார்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

டெஸ்லா, குறைந்த விலை அல்லது வாங்கும் சக்திக்கு உட்பட்ட வாகனங்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதை நோக்கமாக கொண்டிருப்பதால், இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு வளர்ச்சியென கூறப்படுகிறது.

அதிக விலை, உயர்ந்து வரும் வட்டி விகிதம் ஆகியவை, அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் மின்சார கார்களின் பயன்பாடு இன்னும் அவ்வளவாக பிரபலம் அடையாததற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.

அதனால், மின்சார கார்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க, வாங்கும் சக்திக்கு உட்பட்ட விலை குறைவான EV – மின்சார கார்களை தயாரிக்க, டெஸ்லா தலைமை செயல்முறை அதிகாரி எலோன் மஸ்க் நீண்ட காலமாகவே திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

எனினும், எப்பொழுது அந்த கார்களின் தயாரிப்பு நடவடிக்கைகள் தொடங்கும் என்ற விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!