Latestமலேசியா

25,000 திற்கும் மேற்பட்ட இலவச தொழில் திறன் பயிற்சிகளை HRD Corp வழங்கும்

கோலாலம்பூர், மே 5 – இவ்வாண்டு ஜூன் மாதம் 24 ஆம் தேதி தொடங்கி 30 ஆம் தேதிவரை தேசிய பயிற்சி வாரத்தை முன்னிட்டு உயர் தொழிற்நுட்ப திறன் பயிற்சி உட்பட 25,000 த்திற்கும் மேற்பட்ட இலவச பயிற்சிகளை HRD Corp வழங்கவிருக்கிறது.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட பயிற்சியை போன்று இவ்வாண்டும் இத்தகைய பயிற்சி நடத்தப்படுவதால் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மலேசியர்கள் பயன் அடைவார்கள் என HRD Corpபின் திட்ட அதிகாரி Soffian Amin தெரிவித்திருக்கிறார். அரசாங்க நிறுவனங்கள் , கல்வி நிறுவனங்கள் , தனியார் பயற்சி வழங்குவோர் மற்றும் தொழில் திறன்களைக் கொண்ட அரசு சார்பற்ற தரப்பினரும் இந்த பயிற்சிகளை வழங்குவார்கள் என அவர் கூறினார்.

நிர்வாகத் திறன் தொடர்பான பயிற்சிகளுடன் கணக்குகள் தணிக்கை, டிரோன் தொழிற்நுட்பம், செயற்கை தொழிற்நுட்பம் போன்ற குறிப்பிட்ட தொழில் திறன் பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளன. நாடு முழுவதிலும் நடைபெறும் தேசிய பயிற்சி வாரத்தை முன்னிட்டு தனது பங்காளிகளுடன் இணைந்து 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் HRD Corp நடத்தும் என நேற்று நடைபெற்ற நோன்பு பெருநாள் உபசரிப்பு நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் Soffian Amin தெரிவித்தார்.

கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பயிற்சிகளில் சுய முன்னேற்றத்திற்கான பயிற்சிகள் பிரபலமானதாக விளங்கியதாகவும் இத்தகைய பயிற்சிகளில் இந்த ஆண்டு மேலும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!