Latestமலேசியா

3 விரல்கள் துண்டிக்கப்படும் அளவுக்கு காயம் அடைந்த ஆடவரை ரோந்து போலீஸ்காரர்கள் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதில் உதவினர்

நீலாய் , ஜூன் 11 – கையில்   மூன்று விரல்கள்  துண்டிக்கப்படும்  சூழ்நிலைக்கு உள்ளான  இளைஞர் ஒருவரை    MPV   ரோந்துக் கார் பிரிவைச் சேர்ந்த  இரு போலீஸ்காரர்கள்   விரைவாக மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் புனிதமான  நடவடிக்கையில்  ஈடுபட்டனர்.   வடக்குதெற்கு நெடுஞ்சாலையில்    தனது   Yamaha  125 Z  மோட்டார் சைக்கிளை    40 வயதுடைய  ஆடவர் ஒருவர்   பழுதுபார்த்துக்கொண்டிருந்தபோது  அவரது வலது கையின்  மூன்று விரல் துண்டிக்கப்படும் அளவுக்கு காயத்திற்கு உள்ளானார்.  அவர்  மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும்படி தனது உறவினரை அழைத்துள்ளார்.   எனினும் அவர்கள் சென்ற கார்   அதிக சூடாகிவிட்டதால் தொடர்ந்து செல்ல முடியவில்லை.  

 அப்போது  நீலாய்   மாவட்ட போலீஸ் தலைமையகத்தின்  காப்பரல்   முகமட்  ரிசாட்  ரோஸ்லான்   (Mohd   Rishad    Roshlan)    மற்றும் காப்பரல் ஹசுவான் அஷாரி ஷாக்கரியா (Hazuan  Azari Zakaria )  ஆகியோர்  போலீஸ் ரோந்து காரில்  நீலாய்லாபு  பகுதியில்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

நீலாய்  7 தொழில்மயப் பகுதிக்கு  அவர்களது  காரை அருகே ஒருவர் நிறுத்தியுள்ளார். மோட்டார்  சைக்கிளை பழுதுபார்த்தபோது தனது மைத்துனரின்  கையில் மூன்று விரல்களும் துண்டிக்கப்படும் நிலைக்கு உள்ளானதால் விரைவாக   மருத்துவமனைக்கு கொண்டுச் செல்வதற்கு  உதவும்படி அவர்  கேட்டுள்ளார். 

இதைத் தொடர்ந்து காயம் அடைந்த ஆடவரை  செனவாங்கிற்கு அருகேயுள்ள   Salam மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில்  அந்த இரு போலீஸ்காரர்களும் சேர்த்தனர்.    அறுவை சிகிச்சைக்குப்பின்   நேற்று   இரவிலேயே அந்த ஆடவர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!