Latestமலேசியா

3 ஆண்டு காலத்தில் ஒப்பந்த கால மருத்துவ அதிகாரிகளில் 3,000 பேர் விலகினர்

கோலாலம்பூர், மார்ச் 20 – 3 ஆண்டு காலத்தில் ஒப்பந்த கால மருத்துவ அதிகாரிகளில் சுமார் 3,000 பேர் வேலையிலிருந்த விலகியுள்ளனர். தனியார் துறை மற்றும் பொதுபல்கலைக்கழகங்களில் வேலை கிடைத்தது மற்றும் உடல் நல பிரச்சனை காரணமாக விலகுவதாக அவர்கள் காரணம் தெரிவித்தனர். ஒப்பந்தகால மருத்துவ அதிகாரிகளில் 768பேர் கடந்த 2021 ஆம் ஆண்டு விலகினர். 2022 ஆம் ஆண்டு 1,354 மருத்துவ அதிகாரிகளும் கடந்த ஆண்டு 924 மருத்துவ அதிகாரிகளும் வேலையிலிருந்து விலகினர்.

வேலையிலிருந்து விலகிய ஒப்பந்தகால மருத்துவ அதிகாரிகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் இருப்பதால் நிரந்தர நியமனத்திற்காக ஒப்பந்தகால மருத்துவர்கள் நீண்ட காலம் காத்திருப்பதால் ஏமாற்றத்திற்கு உள்ளாகின்றனரா என்பது குறித்து சுகாதார அமைச்சு ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என பினாங்கு DAP மேலவை உறுப்பினர் டாக்டர் லிங்கேஸ்வரன் மேலவையில் ஆற்றிய உரையில் கேட்டுக் கொண்டார். இதனிடையே 2019 ஆம்ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டுவரை சுகாதார அமைச்சு 9,822 மருத்துவ அதிகாரிகளை நிரந்தரமாக நியமித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!